காமெடி நடிகர் சதீஷ் புலிக்கு பால் கொடுத்தாற் போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்படம் முதல் பாகத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காமெடி நடிகர் சதீஷ்.
இவர் பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து சினிமாவில் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்திருந்த தமிழ்ப்படம் 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பை தாண்டி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் நடிகர் சதீஷ். அவ்வப்போது சமூக பிரச்சனைகள் பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் யூலை 29 ஆம் திகதி புலிகள் தினத்தையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நடிகர் சதீஷ் அதில் புலிக்கு பாலூட்டுகிறார். மேலும் அந்த புலியின் தலையில் தடவிக்கொடுத்து முத்தமும் கொடுக்கிறார்.
இந்த வீடியோவை புலிகள் தினத்திற்காக தான் பகிர்ந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வீடியோ முகநூல், ட்விட்டர் என அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதில், சிலர் மரண பீதி கண்ணுல தெரியுதே என சதீஷை கலாய்த்து வருகின்றனர்.