தாஜ்மகால், உலக காதலின் இலச்சினையாய் திகழும் ஓர் இந்திய கலை பொருள்.
இதன் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்திருந்தளும், இதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் உயிரின் காதலும், நேசமும் விலைமதிப்பற்றதாகும்.
பல ஆண்டுகளாக, பல ஆயிரக்கணக்கான வேலையாட்களை கொண்டு விலைமதிப்பற்ற சலவை கற்கள் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது தாஜ்மகால். உண்மையில், இதன் நேர் எதிராக பிரதிபலிக்கும் மற்றுமொரு தாஜ் மகாலையும் கட்ட ஷாஜாகான் நினைத்திருந்தார்.
காலத்தை கடந்து நிற்கும் இந்த காவிய சின்னத்தை பற்றிய சில வியக்க வைக்கும் தகவல்கள் பற்றி இனி காணலாம்…
தகவல் 1
தாஜ்மகால் அதிகாலை பின்க் நிறத்திலும், நாள் வேளையில் வெள்ளை நிறத்திலும், இரவு நிலா வெளிச்சத்தில் கோல்டன் நிறத்திலும் காட்சியளிக்கும்.
தகவல் 2
தாஜ்மகாலின் தூண்கள், வெளிப்புறத்தில் சாற்றி சாந்திருப்பது போன்று தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், பூகம்பம் வந்தாலும் கூட, அவை கட்டிடத்தின் மீது விழாமல், வெளிப்புறத்தில் தான் விழும்.
தகவல் 3
மிக ரம்மியமான இந்த கட்டிடத்தை கட்ட 28 வகையான விலைமதிப்பற்ற சலவை கற்கள் பயன்படுத்தப்பட்டன.
தகவல் 4
தாஜ்மகாலை நீங்கள் எந்த திசையில் இருந்து பார்தால்லும் சமச்சீரான அளவில் / தோற்றத்தில் தான் தெரியும். ஆனால், உள்ளே இருக்கும் கல்லறைகள் இரண்டும் வெவ்வேறு அளவில் இருக்கின்றன. பெண் கல்லறையைவிட, ஆண் கல்லறை பெரிது என கூறப்படுகிறது.