இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்றிருக்கின்ற செய்தி வைரலாக பரவி வருகின்றது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் கனமழையுடன் வெள்ளம் பெருக்கெடுத்து பல அழிவுகளை சந்தித்தது. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரஹ்மான், லோஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா… முஸ்தபா…’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா… கேரளா… டோண்ட் வொர்ரி கேரளா… காலம் நம் தோழன் கேரளா…’ என்று பாடியுள்ளார்.
இதன்போது இப்பாடலை கேட்ட எல்லோரும் பலத்த கரகோஷ்ங்களை எழுப்பினர். இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் தெரியவரும் உதவிகள் பெருகும் என்று கூறப்படுகிறது.