நடிகை அனுஷ்காவுக்கு இன்றும் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். பாகுபலி, பாகமதி என அவரின் படங்கள் அதிக வரவேற்பை பெற்று வசூல் வெற்றியை குவித்தது.
அவரின் கையில் தற்போது படங்கள் பெரிதாக எதுவும் இல்லை. மறுபக்கம் வயது 35 ஐ கடந்ததால் அவருக்கு வீட்டில் தீவிரமாக வரன் தேடி வருகிறார்கள். இதற்காக அடிக்கடி கோவில்களுக்கும் சென்று பூஜை செய்துவருகிறார்கள். ஒருபக்கம் அவருக்கும் பிரபாஸ்க்கும் காதல் என அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இருவருமே இதை மறுத்துவிட்டார்கள். அனுஷ்கா எப்போதும் யோகாவில் மிகவும் ஆர்வம் கொண்டவர். சைஸ் ஜீரோ படத்திற்காக தன் எடையை கூட்டியவர் பின் குறைக்கமுடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.
அத்துடன் அவருக்கு பாகுபலி படத்தின் போது கிராஃபிக்ஸ் மூலம் உடல் எடை குறைவாக இருப்பது போல காண்பிக்கப்பட்டது என்பதே உண்மை.
அண்மையில் ஒரு புகைப்படம் ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்டது சமூக வலைதளங்களில் வந்துள்ளது. இதில் அவர் சற்று உடல் எடை கூடியிருப்பது போல இருந்தது.
இதை பார்த்த சிலர் அவரின் உடல் தோற்றத்தை கிண்டல் செய்துள்ளார்கள்.