அண்மைகாலமாக சினிமாவில் நடிகைகள் மீது பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதை பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இது இங்கு மட்டுமல்ல ஹாலிவுட் சினிமாவிலும் தான்.
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் முதன்மையாக இருந்தவர் நடிகை ஆசியா அர்ஜெண்டோ.
தற்போது இவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஹாலிவுட்டை சேர்ந்த இளம் நடிகர் ஜிம்மிம் பென்னட். இவருக்கு வயது 17 மட்டுமே.
இவர் மீது காதல் கொண்டதாகவும் கலிபோர்னியாவில் ஹோட்டலில் மது போதைக்கு ஆளாக்கி அவருக்கு பாலுறவு கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட ஜிம்மிக்கு 3.5 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கொடுக்கும் படி வழக்கு போடப்பட்டதாம். ஆனால் 3.80 லட்சம் டாலர்கள் கொடுக்கப்பட்டு பிரச்சனை முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.