Loading...
தாடி, மீசை வளர்த்தால் கெத்து இருந்த காலம் போய், தாடியும் மீசையும் இருப்பது ஸ்டைல், ஸ்மார்ட் என்றாகிவிட்டது. குறிப்பாக பிரேமம் படத்திற்கு பிறகு ஆண்கள் அனைவரும் அடர்த்தியான தாடி வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல்கலை மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை எங்கு திரும்பினாலும் தாடி மீது ஆர்வம் கொண்டவர்களையே பார்க்க முடிகிறது.
சிலருக்கு போதும் போதும் என்று சொன்னாலும் நிற்காமல் வளர்ந்துக்கொண்டே இருக்கும் தாடி, ஆனால் சிலருக்கோ ஒற்றைக் காலில் தவம் இருந்தாலும் தாடி என்ன மீசைக் கூட அடர்த்தியாக வளராது. அந்த நேரத்தில் ஆசையை தீர்க்க என்ன செய்தால் அடர்த்தியான தாடி வளர வைக்கலாம் என்பதற்காக இந்த எளிமையான விடயங்கள்.
Loading...
வழிமுறைகள்:
- முகத்தையும், கழுத்தையும் அடிக்கடி நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை வெளியேற்றி முடி வளர உதவும்.
- ஒரு நாளுக்கு 2 முறைகள் சருமத்தை வெந்நீரில் கழுவ வேண்டும்.
- தூங்கச் செல்லும் முன்பாக நெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை மிருதுவான கிறீம்களை பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.
- நாளொன்றுக்கு 6 மணி நேரம் நல்ல உறக்கத்தைப் பெற வேண்டும். நல்ல உறக்கத்தால் தாடி, மீசை உள்ளிட்ட முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
- விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, கொய்யா போன்ற பழங்களையும், காய்கறிகளையும் தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
- முடி வளர்ச்சியை தூண்டும் புரோட்டின் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை அவசியம் சாப்பிட்டு வரவேண்டும்.
- தாடி-மீசை வளர்ச்சிக்கென சந்தையில் விற்கப்படும் ஆர்கனிக் எண்ணெய் வகைகளை தீர விசாரித்து, குறிப்பாக இணையத்தில் அதன் பயன்பாடுகள் குறித்து படித்துவிட்டு வாங்கி பயன்படுத்துவது நன்று.
- நாட்டுக்கோழி இறைச்சி, மீன், முட்டை ஆகிய உணவுகளை வாரத்திற்கு 2 முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- விட்டமின் நிறைந்த வாழைப்பழம், வெள்ளரி, இளநீர் ஆகியவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் காற்றுப்போக்குடன் இருக்கும். தாடி மீசை வளரவும் வழிவகுக்கும்.
- மேலே சொல்லப்பட்டுள்ள உணவுகள் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு அப்படியே இருந்துவிட்டால் மட்டும் முடி வளர்ச்சி கிடைக்காது. இத்துடன் நீங்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
Loading...