இயேசுவின் வருகைக்காக தனது குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த தந்தையைப் பற்றிய செய்தியொன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
பிறந்து 16 மாதங்களேயான பச்சிளம் குழந்தையை, தந்தை கத்தியால் பலமுறைக் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த சந்தேக நபரை, அமெரிக்க காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்போது குறித்த நபர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பல செய்திகளை வெளியிட்டுள்ளார்.
தான் ”இயேசு வருகிறார் என்று சத்தமாகக் கத்திக் கொண்டே கத்தியால் பலமுறை குழந்தையை குத்திக் கொலை செய்தேன்” என குறித்த நபர் கூறியுள்ளார்.
இயேசுவின் வருகையை விரைவில் அனைவரும் காணலாம் எனவும், இயேசுவிற்காகவே தனது பாசமான குழந்தையை பலிகொடுத்ததாகவும், குறித்த நபர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.