சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘’சினிமாவில் நான் அறிமுகமாகி 10 ஆண்டுகளாகியுள்ளன.
இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்து நடித்தது தான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த படங்களில் மட்டுமே நடிப்பேன்.
இந்த 10 ஆண்டுகளில் எனக்கு திரைத்துறையில் கிடைக்க வேண்டிய மரியாதையும், மதிப்பும்,பாதுகாப்பும் இன்று வரை கிடைத்து வருகிறது.
இது சினிமாவில் பெண்களுக்குள்ள பாதுகாப்பையே விளக்குகிறது” எனக் கூறியுள்ளார்.
திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென பல பிரபலங்கள் கூறிவருகின்ற நிலையில், சுருதி ஹாசன் கூறிய இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.