முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரப் பரீட்சை எழுதிவரும் மாணவியை பளையைச் சேர்ந்த இளைஞனொருவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தினார் என்று முறைப்பாடு கிடைத்தது.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பளையைச் சேர்ந்த 22 வதுடைய இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்”
இவ்வாறு புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
“நேற்று திங்கட்கிழமை பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை வாகனமொன்றில் கடத்தி சென்ற கும்பல், பளைப்பகுதியில் வைத்து அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
மாணவியை இன்று காலை உடையார்கட்டுப் பகுதியில் கொண்டுவந்து அந்தக் கும்பல் இறக்கிவிட்டுள்ளது” என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
“பரீட்சை எழுதச் சென்ற மாணவி நேற்று இரவுவரை வீடு திரும்பாத நிலையில் அவரைக் காணவில்லை என மாணவியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் மாணவி இன்று காலை உடையார்கட்டுப் பகுதியில் வாகனத்தில் அழைத்துவந்து இறக்கிவிடப்பட்டார். வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவத்தினை தாயாரிடம் கூறினார்.
மாணவியுடன் தாயார் பொபொலிஸ் நிலையம் சென்று நடந்தவை தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டார்.
புதுக்குடியிருப்பு பொலிஸார் இளைஞனை தேடி பளைப் பிரதேசத்திற்கு சென்று கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு இளைஞனை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சேர்கக்ப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனை நாளை நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.