Loading...
கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத், ரசிகர் ஒருவரின் விருப்பப்படி, கேரளாவுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
சுபம்ராஜன் என்பவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிதி உதவி அளிக்க விரும்புவதாகவும் ஆனால் தம்மிடம் பணம் இல்லை என்றும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் இன்ஸ்டாகிராமில் வருத்தத்தை பதிவு செய்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து ஒரு கோடி ரூபாயை கேரள முதலமைச்சர் நிவாரண நிதி கணக்குக்கு அனுப்பிய ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்ட சுஷாந்த் சிங் ராஜ்புத், சுபம்ராஜன் பெயரைக் குறிப்பிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தங்களால் தான் இது நடந்தது என ரசிகரை சுஷாந்த் சிங் பாராட்டினார்.
Loading...