இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரா வெற்றி பெற்றுள்ளது.
முதல் இன்னிங்சில் இந்தியா 323 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன.
168 ரன் முன்னிலையுடன் 2 வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
இதன்மூலம் இங்கிலாந்துக்கு 521 ரன் நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன் எடுத்து இருந்தது.
இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்றது.
இதேபோல், இன்றைய தினம் கடைசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி இந்தியா அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றியை ருசித்த 6 ஆவது இந்திய அணி தலைவராக விராட்கோலி வரலாற்றில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது