திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் உள்ள மதகுருக்கள் சிவசின்னமான வீபுதியையும் மற்றய பூசைப் பிரசாதங்களான சந்தனம், தீர்த்தம், குங்குமம் முதலியவற்றை அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.
இவர்கள் இவற்றை அலட்சியமாக பக்தர்களின் கைகளில் கொட்டுவது, நிலத்தில் சிந்துவது, பக்தர்களின் நெற்றியில் அவசரமாக நெற்றியில் அலங்கோலமாக இடுவது போன்ற சிவசின்னங்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பல தடவை கோணேசர் கோவில் நிர்வாக சபையினரிடமும் தலைவர் பரமேஸ்வரனிடமும் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எமது சைவசமயத்தில் சிவசின்னங்களின் முக்கியத்துவத்தை அறியாத மூடர்களாகவே இவர்கள் உள்ளார்கள்.
வீபூதியின் மகிமையை உணராத மூடர்களாகவே இவர்கள் உள்ளார்கள். தேவாரதிருப்பதிகங்களில் எமது நாயன்மார்கள் திருநீற்றின் பெருமையையும் புனிதத்தையும் புகழ்ந்து பாடியுள்ளனர் இதனை அறியாதவர்களே திருக்கோணஸ்வரத்தின் மதகுருமார்கள்.