அஜித் ரசிகர்களுக்கு தற்போது மிகுந்த கொண்டாட்டமான நேரம். அவர் நடித்து வரும் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. பல நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கண்மூடாமல் முழித்து கிடந்த அவர்கள் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் குஷியாகிவிட்டார்கள்.சிவா இயக்கும் இப்படத்தில் அஜித் இரட்டை வேடம் என சொல்லப்பட்டு வந்தது தற்போது உறுதியாகிவிட்டது.
மேலும் தீபாவளியில் இருந்து சற்று தள்ளி பொங்கலுக்கு வெளியாகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்ட்ரில் அவர் ஒரு அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கி வயதான தோற்றத்தில் இருக்கிறார்.
ஒரு பக்கம் கிராமம். இன்னொரு பக்கம் நகரம் என இரண்டையும் மையப்படுத்தி கதை இருக்கும் என யூகிக்கப்படுகிறது. இன்னொரு அஜித் இளமையான தோற்றத்தில் இருக்கிறார்.
மேலும் மீசையை தொட்ட படி கையில் அவர் கட்டியிருக்கும் வாட்ச்சில் மணி 3.25 என காட்டுகிறது