சிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இதனால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
சிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு தான் அவசரமாக இருந்தாலும், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.
நீங்கள் அப்படிப்பட்டவரா? அப்படியெனில் இந்த கட்டுரையை தவறாமல் படிக்க வேண்டும். ஏனெனில் இங்கு சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
எத்தனை முறை வீட்டில் உள்ளோர் கூறினாலும், அதை பொருட்படுத்தாமல் பலர் சிறுநீரை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு சிறுநீரை அடக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இக்கட்டுரை தெளிவாக விளக்கும்.
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. கவனச்சிதறல் ஏற்பட்டால், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. உதாரணமாக, பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது வந்து, அதனை நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே பைக் ஓட்டினால், சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய், பின் அது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். மேலும் இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.
மேற்கூறிய பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில், எப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று தோன்றுகிறதோ, அப்போது உடனே சிறுநீர் கழிக்க வேண்டும். மேலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க தயங்குபவராக இருப்பின், வெளியே இருக்கும் போது தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், சிறுநீர்ப்பை விரைவில் நிறைந்துவிடும்.