யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தயிலிட்டி திஸ்ஸ விகாரையை மீள புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது.
பாதகட விமலஞான தேரர் தலைமையில் நேற்று நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
1946ம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் பாதகட விமலஞான தேரர் குறித்த விகாரைக்குரிய காணியினை இனங்கண்டு அதனை மீள நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக குறித்த பகுதியில் அமைந்திருந்த விகாரையில் 1954ஆம் ஆண்டு இறுதியாக வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால், பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் குறித்த விகாரை முற்றாக அழிவடைந்துள்ளது.
குறித்த விகாரையை புனரமைக்கும் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.சோமசிறி, கிராம சேவையாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.