இலகுவாக வீட்டில் இருந்தே தயாரிக்க கூடிய சுவையான மெது வடை செய்வதற்காக முறையை அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்…
1 கப் உழுத்தம் பருப்பு
¼ தேக்கரண்டி நறுக்கிய மிளகு
½ தேக்கரண்டி சீரகம்
1 பச்சை மிளகாய்
½ தேக்கரண்டி பெருங்காய தூள்
2-3 டீஸ்பூன் தண்ணீர்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை..
ஒரு கப் உழுத்தம் பருப்பினை நீரில் போட்டு 4 – 5 மணித்தியாளங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
ஊறிய பின்னர் நீரை வடிக்கட்டி கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்றாக அறைத்த கொள்ள வேண்டும்.
சிறிதளவு நீர் சேர்த்து பல முறை அறைத்து கொள்ள வேண்டும்.
பதமாக அறைத்த அதனை பாத்திரம் ஒன்றில் எடுத்து கொள்ள வேண்டும்.
அதில் மிளவு, சீரகம், பச்சை மிளகாய், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். அதனை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவினை மெது வடை வடிவில் அமைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரம் ஒன்றை சூடாக்கி அதில் அதனை போட்டு பென்னிறமாகும் வரை பொறித்து எடுக்க வேண்டும்.
பொறித்த வடை எடுத்து சுட சுட பரிமாற வேண்டும்.