நடுக்காட்டில் வைத்து கள்ளக் காதலனுடன் இணைந்திருந்த தனது மனைவியைப் பார்த்ததும், கணவர் குறித்த இருவரையும் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் இந்தியாவின் தூத்துக்குடியில் பதிவாகியுள்ளது.
தனது மனைவி கள்ளக் காதலனோடு உல்லாசமாக இருந்ததைக் கண்ட கணவன், அவரது மனைவியையும் கள்ளக் காதலனையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த குறித்த நபர், அடிக்கடி வெளி இடங்களுக்கு செல்லும் நிலையில், அவரது மனைவி தனது கள்ளக் காதலனுடன் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனிடையே திடீரென அப்பகுதிக்கு வந்த பெண்ணின் கணவரது நண்பர் ஒருவர், குறித்த விடயத்தை தொலைபேசியில் அழைத்து கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட பெண்ணின் கணவர் குறித்த காட்டுப் பகுதிக்கு விரைந்த போது, இருவரும் வசமாக மாட்டியுள்ளனர்.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த அவர், தனது மனைவியையும் அவரது கள்ளக் காதலரையும் அதே பகுதியில் வைத்து கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.