பிரபல நடிகரும், நடன கலைஞருமான அபிஜித் ஷிண்டே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தி திரையுலகை சேர்ந்த அபிஜித் நேற்று முன் தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அபிஜித் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது.
சம்பவம் குறித்து விசாரித்து வரும் பொலிசார் கூறுகையில், மனைவியுடன் அபிஜித்துக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் மூன்று மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
இதையடுத்து மனையிடம் உள்ள தனது குழந்தையை பார்க்க அபிஜித் அனுமதி கேட்டும் மனைவி அதற்கு மறுத்துள்ளார்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த அபிஜித் இம்முடிவை எடுத்துள்ளார் என கூறியுள்ளனர்.
இதனிடையில் அபிஜித் எழுதி வைத்துள்ள கடிதத்தில், தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தனது குழந்தை பெயரில் மாற்றிவிடுமாறு கோரியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.