தேனிலவுக்கு சென்ற இடத்தில் தங்களின் கமெராவை தொலைத்த தம்பதி அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.
டெரிக் என்ற இளைஞரும், பெர்ணாண்டா என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.
பின்னர் புதுமண தம்பதி தேனிலவுக்கு சென்றார்கள்.
திருமண நிகழ்வையும், தங்களின் குடும்பத்தினருடன் இருந்த மகிழ்ச்சியான தருணத்தையும் டெரிக்கும், பெர்ணாண்டாவும் புகைப்படங்கள் எடுத்திருந்த கமெராவையும் உடன் எடுத்து சென்றனர்.
இந்நிலையில் தேனிலவு சென்ற இடத்தில் கமெராவை இருவரும் தொலைத்துள்ளனர்.
இது குறித்து டெரிக் மற்றும் பெர்ணாண்டா கூறுகையில், எங்களின் திருமணம் அந்தளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெறவில்லை.
ஆனால் எங்கள் குடும்பத்தினருடன் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்தோம்.
இது போன்ற சிறந்த நினைவுகளை கொடுக்கும் புகைப்படங்கள் மீண்டும் கிடைக்காது.
அந்த புகைப்படங்கள் இருக்கும் கமெரா தொலைந்து போனது கவலையளிக்கிறது.
கமெராவை கண்டுப்பிடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.