Loading...
மக்கள் வங்கியின் நிறைவேற்று அதிகாரி பதவியிலுள்ள ஒருவர் தற்பொழுது ஒரு மாதத்துக்கு 21 லட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும், இவரது பதவிக் காலத்தை நீடிக்குமாறு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹதுன்னெத்தி எம்.பி. தெரிவித்தார்.
இந்த அதிகாரிக்கு 60 வயது நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அதிகாரி தனது பதவியில் இருக்கும் போது ஏழு லட்சத்து 50 ஆயிர் ரூபாவை சம்பள நிலுவையாகவும் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Loading...
கோப் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
இதன்பிறகு, உயர் அதிகாரிகளை நியமிக்கும் போது வங்கியிலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளையே நியமிக்குமாறும் சுனில் ஹதுன்னெத்தி பரிந்துரை செய்துள்ளார்.
Loading...