கேரளாவில் பெய்த கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக லட்ச கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா உதவ முன்வந்துள்ளனர்.
கேரளாவை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உதவியுள்ளனர்.
கோஹ்லி – அனுஷ்கா நிதியுதவி அளித்துள்ளனர். நிதி உதவி வழங்கியதோடு மாத்திரமின்றி, கேரளாவில் உள்ள அரசு சாரா அமைப்புடன் இணைந்து கேரள மக்களுக்கு அவர்கள் உதவியுள்ளனர்.
அத்தோடு அங்கு பாதிக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு மருத்துவ உதவியும், உணவும் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
விலங்குகளை பாதுகாப்பது அவசியம் என கூறி, ஒரு லொரியில் மருத்துவக்குழுவுடன் மருந்துப் பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.