சுவையான சாக்லேட் மற்றும் வால்நட் சில்க் கேக் செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்
100 கிராம் பட்டர்
4 முட்டை
100 கிராம் சமையல் சாக்லேட்
20 கிராம் சர்க்கரை
60 கிராம் வால்நட்
ஐசிங் செய்வதற்கு
100 கிராம் டார்க் சாக்லேட்
50 கிராம் whipped கிரீம்
செய் முறை
இந்த ருசியான கேக் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் முட்டை மற்றும் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது பட்டர் மற்றும் சாக்லேட் ஒன்றாக உருக்கி நன்றாக சேர்த்து கொள்ள வேண்டும்.
சாக்லேட் பட்டம் மற்றும் வால்நட் பருப்பை முட்டை மற்றும் சர்க்கரை கலவையில் சேர்க்க வேண்டும். அந்த கலவையை இப்போது இந்த அவனில் வைத்து, 30-35 நிமிடங்கள் 170 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வேக வைக்க வேண்டும்.
பின்னர் கீரிம் மற்றும் சாக்லேட்டை வேக வைக்க வேண்டும். தற்போது இந்த கலவையை குளிர வைத்து, வேக வைத்த கேக்கின் மீது பூசிக்கொள்ளவும். பின்னர் அதன் மீது வால்நட் சேர்த்து பரிமாறலாம்.