நடிகை ஸ்ரீரெட்டி தனியார் நிறுவனத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு சினிமாவில் ஏகபோகமாக பெண்கள் ஏமாற்றப்படுவதாக கொதித்தெழுந்த ஸ்ரீரெட்டி வாய்ப்புக்காக பல பிரபலங்கள் படுக்கைக்கு அழைத்ததாக பட்டியலை வெளியிட்டார்.
அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிவரும் ரெட்டி டைரி என்ற திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது தெலுங்கு திரையுலகை திட்டி தீர்த்தார்.
அங்கு ஸ்ரீரெட்டிக்கு உதவ யாரும் முன்வரவில்லை எனவும், சென்னை நகரம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருப்பதால் இங்கேயே தங்கி தமிழக மக்களுக்கு சேவையாற்ற போவதாகவும், மன உறுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளேன் எனவும் கூறினார்.
இப்போது, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி ஸ்ரீரெட்டிக்கு பேஸ்புக்கில் குறுந்தகவல் அனுப்பியதாகக் கூறி ஒரு ஸ்கிரீன் ஷாட் குறுந்தகவலை பதிவிட்டுள்ளார்.
அதில் மூன்று நாட்கள் மட்டுமே வேலைபார்த்ததாகவும், சிவக்குமார் என்ற மேலாளர் தவறான முறையில் நடக்க முயன்றதாகவும் உள்ளது. இதை பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி சென்னை பெண்கள் சேர்ந்து அவனுக்கு செருப்படி கொடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.