தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும் அழகை பாதுகாக்க முடியும். அழகுபடுத்துவதற்காக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது.
அழகு போன்று பல்வேறு சுகாதார நலன்களுக்காகவும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது.
அனைத்து தரப்பிலான மக்களுக்கும் பல்வேறு வகையில் தேங்காய் எண்ணெய் உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுத்தமாக சுவாசிப்பதற்கு, மேக்கப் ப்ரஷ் சுத்தம் செய்வதற்கு, தலை முடி மாஸ்க் போடுவதற்கு, வீட்டில் இருந்தே செய்யும் லிப் ஸ்க்ரப் பயன்பாடு உட்பல பல விடயங்களுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றுது.
வடுக்களை குணப்படுத்துவது முதல் முழங்கால்களை ஈரப்பதனாக்குவது வரை அனைத்து விடயங்களுக்கும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம்.
மேக்கப் நீக்குவதற்கு: நீரிலும் கரையா மஸ்காரா, தேங்காய் எண்ணெயிடம் தோற்றுவிடும். முகத்தின் எண்ணைய் பசையை போக்கும் பொருளாக தேங்காய் எண்ணெயை தடவலாம். இல்லை என்றால் பஞ்சு துண்டு ஒன்றின் உதவியுடன் தேங்காய் எண்ணையை முகத்தில் பூசலாம். முகத்தில் நீக்க முடியாமல் உள்ள மேக்கப்களை இலகுவாக நீங்கிவிடும்.
சுத்தமான சுவாசத்திற்கு: தேங்காய் எண்ணெய் என்டிபாக்டீரியாக்களின் பண்புகளை கொண்டுள்ளது. 20 நிமிடங்கள் வாய்க்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். அப்படி செய்தால் வாயில் உள்ள கிறுமிகளை நீக்கி சுத்தமான சுவாசத்தை கொடுப்பதோடு, வென்மையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளுக்கு வழிவகுக்கிறது.
தலை முடி சிகிச்சைகளுக்கு: முதலில் ஆப்பிள் சைடர் வினிகரை பூசிக்கொள்ள வேண்டும். அது காய்ந்தவுடன், தேங்காய் எண்ணெயை தலை முழுவதும் பூச 12 அல்லது 24 மணித்தியாளங்களின் பின்னர் கழு வேண்டும். தலை முடியை சீவிய பின்னர் ஷப்போ கொண்டு கழுவ வேண்டும்.
ஈரப்பதமான முகத்திற்கு: முகத்தில் உள்ள சமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு முகத்தில் தேங்கா எண்ணெய் பூசலாம். முகத்தை மிருதுவாக வைத்து கொள்வதற்கு மேக்கப் போடுவதற்கு முன்னர் தேங்காய் எண்ணெயை பூச வேண்டும்.
மேக்கப் ப்ரஷ் சுத்தம் செய்வதற்கு, மாதம் ஒரு முறை உங்கள் மேக்கப் ப்ரஷை சுத்தம் செய்ய வேண்டும். தேங்காய் பூசி அதனை சுத்தம் செய்யலாபம்.
விப் பாம்: வெடித்த உதடுகளுக்கு முக்கிய தீர்வாக தேங்கா எண்ணெய் உள்ளது. அதனை ஒரு சிறிய போத்தலுக்குள் அடைத்து உதடில் பூசி வரலாம்.