தாயின் இறுதிச் சடங்கிற்கு வர அவரது மகள் மறுத்ததால், அக்கம் பக்கத்தினரே அந்த தாயின் உடலை தகனம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை அளிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் திராஜ் பட்டேல் (70). இவரது மனைவி நிருபென் (65). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி ஆமதாபாத்தில் வசித்து வருகிறார். பக்கவாத நோயால் பாதித்த கணவரை நிரூபென் கவனித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று நிரூபென் மாரடைப்பால் திடீரென இயற்கை எய்தினார். தாய் இறந்த செய்தியை அக்கம்பக்கத்தினர் திராஜின் மகளுக்கு தெரிவித்தனர். அதற்கு அந்த இரக்கமற்ற மகள் இறுதி சடங்கிற்கு வரவதற்கெல்லாம் எனக்கு டைம் இல்லை எனக் கூறிவிட்டு சட்டென இணைப்பை துண்டித்தார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினரே நிருபெனின் உடலை தகனம் செய்தனர். தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என பக்கவாதத்தால் பாதித்த திராஜ் கதறி அழுதார்.
இதனையடுத்து மீண்டும் திராஜ் மகளுக்கு போன் செய்த அக்கம்பக்கத்தினர் உங்களின் தாயின் உடலை நாங்களே தகனம் செய்துவிட்டோம். அவரின் அஸ்தியையாவது வந்து வாங்கிச் செல்லுங்கள் என கூறியுள்ளனர்.
அதற்கு அந்த பெண் நேரில் வர முடியாது, வேணும்னா அஸ்தியை கூரியரில் அனுப்பி விடுங்கள் என கூறியுள்ளார்.