தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது கொழும்பில் தங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் கொழும்பில் தங்கி நிற்பேன் என்றும் அதற்கிடையில் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித்தர வேண்டும் என்று முதலமைச்சர் பணியகத்தால், எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் கருத்துத் தெரிவித்துள்ளார். முதலமைச்சரைச் சந்திப்பதற்கு கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு எதிர்ப்பு வெளியிடவில்லை.