பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 ம் நாளை எட்டிவிட்டது. இந்த வார இறுதியில் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகிய நால்வரில் வீட்டை விட்டு போகப்போகிறவர்கள் யார் என்பது தான் ரசிகர்களின் பதட்டம்.
இந்நிலையில் வார இறுதியான இன்று பலருக்கும் கமல்ஹாசன் தாளித்தார். என்ன பார்க்கிறீர்கள். மக்கள் சொன்னதை அவர் செய்தார். இதில் மாட்டிக்கொண்டது மஹத் தான்.
கடந்த வாரத்தில் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களை புண்படுத்தும்படி இருந்தது. இதை அனைவரும் ஓப்பனாகவே கூறிவிட்டார்கள். இந்நிலையில் ரித்திகா மஹத் நல்லவன் தான்.
அவனுக்குள் உண்மையான நல்ல குணம் இருக்கிறது. ஆனால் காதல் அவன் கண்ணை மறைத்துவிட்டது என கூறினார். பின்னர் கமல் காதல் யாருடன் என கேட்க யாஷிகாவுடன் என ஓப்பனாக கூறிவிட்டார்.