வாணி ராணி சீரியல் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ளது. இதில் சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகர் ப்ரித்விராஜ்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘என் வாழ்க்கையில் மிக கொடுமையான சீரியல் பயணம் என்றால் வாணி ராணி தான், அந்த படப்பிடிப்பில் மிகவும் கொடுமையை அனுபவித்தேன். என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி தான் வாணி ராணி.
அந்த சீரியலில் எந்த பிரச்சனை நடந்தாலும், ஹீரோயின் தான் கண்டுப்பிடிப்பார், சரி கண்டுப்பிடிக்கட்டும், அதற்கு ஏன் எங்களை டம்மி பீஸாக காட்ட வேண்டும்.
அந்த சீரியல் ரைட்டருக்கு வீட்டில் ஏதோ பிரச்சனை போல, எப்போது பார்த்தாலும் சோக காட்சிகளை தான் கொடுப்பார், இன்னும் கொஞ்ச நாளில் வாணி ராணி முடியவுள்ளது, இனி தான் எனக்கு நிம்மதி’ என ப்ரித்விராஜ் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது