உலகின் மிக பழமையான அறிவுபூர்வமான நாகரீகங்களில் ஒன்று மாயன் நாகரீகம். சித்திர எழுத்து வடிவம், கலை, கட்டடக் கலை, கணிதம், நாட்காட்டி மற்றும் வானியல் ஞானம் ஆகியவற்றுக்காக இன்றும் போற்றப்படும் மெதோமெரிக்கன் நாகரீகம் இது.
மாயன்களைப் பொறுத்தவரை இந்த உலகம் ஓகஸ்ட் 11, 3114 BC இல் தோன்றியது. அவர்களது காலெண்டரும் அன்று தான் ஆரம்பிக்கிறது. அதில் தான் உலகத் தோற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மாயன் நாகரிகம் அழியவில்லை என்றும், மாயன் வம்சாவளியினர் இன்னும் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் பரவலாக கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் எவ்வளவு தூரம் உண்மைகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை.
மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி அறிவு நிறைந்தவர்களாக இருந்தனர். தங்களுக்கென எழுத்துக்கள் வடிவமைத்து வைத்திருந்தனர். புத்தகங்கள் கூட எழுதி இருக்கிறார்கள்.
வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பொறுத்தவரை, மாயன்களின் சித்திர எழுத்து வடிவமே மிகவும் சிரமமானது. எந்த அளவிற்கு என்றால், 1950களின் பிற்பாதி வரை அவற்றை புரிந்து கொள்ளவே கடினமாக இருந்தது.
பூஜ்யத்தை உபயோகப்படுத்திய முதல் மக்கள் மாயன் மக்களே என்று கூறப்படுகிறது. ஆனால் உலக கணித வரலாற்றில் பூஜ்ஜியம் என்பது இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதனால் சில சமயம் இந்தியர்களுக்கும் மாயன் உலகத்தினருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ற குழப்பங்களும் விவாதங்களும் கூட எழுந்தன.
ஆண்கள் பெண்கள் என அனைவரும் தங்கள் உடலில் டாட்டூ போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டினர். டாட்டூ போடும் கலாச்சாரம் இவர்களிடமிருந்து தான் ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது.
மாயன்கள் பிறவியிலேயே சிறந்த பொறியியல் அறிவு கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். எகிப்துக்கு நிகராக உலகின் மிகச் சிறந்த பிரமீடுகளையும், கோவில்களையும் உருவாக்கியுள்ளனர். மாயன்களின் படைப்பான லா டண்டா உலகின் மிகப்பெரிய பிரமீடுகளில் ஒன்று ஆகும்.
இந்த நாகரீகம் வானியலில் சிறந்து விளங்கியது. நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் ஆகியவை வானில் வளம் வரும் கடவுள்கள் என்று அவர்கள் நம்பினர். வானியல் நிகழ்வுகளான உத்தராயணம், சங்கராந்தி, கிரஹணம் போன்றவற்றைப் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதை அவர்களது நாட்காட்டியிலும் குறித்துவைத்துள்ளனர்.
மக்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்கினர். ஔமாமலிஸ்ட்லி நஹுட்டல் என்று அவர்கள் ஒரு விளையாட்டு விளையாடினர். அது இன்றைய கால்பந்து போலவே, கைகளைத் தவிர உடலின் ஏதாவதொரு பாகத்தை உபயோகித்து, பந்தை வலயத்திற்குள் தள்ளும் விளையாட்டு.
இது என்னடா வார்த்தை என்று யோசிக்கிறீர்களா? இதற்கு நீராவிக் குளியல் என்று அர்த்தம். மக்கள், குறிப்பாக பிரசவத்திற்கு பின் பெண்கள் இதை செய்தனர். மன்னர்களும் தலைவர்களும் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இதை பயன்படுத்தினர். இது கற்களால் ஆனது.
தீவு நகரமான தாய்சால், மாயன்களின் கடைசி சுதந்திர சாம்ராஜ்ஜியமாக கருதப்படுகிறது. இது 1696 வரை இருந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது என்று சொல்லப்படுகிறது.
ஷார்க், மாயன் வார்த்தையா?
சில மொழியியல் அறிஞர்கள் ஷார்க் என்பது மாயன் வார்த்தை என்று நம்புகின்றனர். நமக்கு இப்போது சிறிது மாயன் மொழி கூட தெரிந்துவிட்டது.
பிளாஸ்டிக் சர்ஜரி
அவர்களின் அழகை மெருகேற்றிக் கொள்ள மாயன்கள் சில விசித்திரமான முறைகளை கையாண்டனர். உதாரணத்திற்கு, தட்டை வடிவத்திற்காக குழந்தையின் நெற்றியை ஒரு பலகையை வைத்து அழுத்தினர்.
பிரமீடுகள்
குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த தினத்தை பொறுத்து பெயர் சூட்டப்பட்டது. நீங்கள் படத்தில் பார்க்கும் முக்கால்வாசி பிரமீடுகள் சிச்சென் இஸ்சா தான். இது சமீபத்தில் தனியாரிடமிருந்து அரசால் வாங்கப்பட்டது.
மூன்று நாட்காட்டிகள்
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் மாயன் காலண்டர் என்று ஒன்று தான் இருக்கிறது என்று. ஆனால் உண்மையிலேயே அவர்கள் ஒன்றல்ல, அதுபோன்று மூன்று காலண்டர்களை உருவாக்கி இருக்கிறார்கள். இது கேட்பதற்கே மிகவும் ஆச்சரியமான விடயமாக இருக்கும்.