திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.
27ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் வரை வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம். 28ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும். இதில் திமுக பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளவர் வெற்றிபெறுவார்.
மேலும், இதனால் தற்போது திமுக உட்கட்சி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது.
தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.
இரண்டு பேரும் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 65 மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தனர். முக்கிய செயலாளர்கள் ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தனர். ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வாக வாய்ப்புள்ளது.
மேலும், திமுக பொருளாளர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார் துரைமுருகன். இவரும் ஒருமனதாக தேர்வாக வாய்ப்புள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் இருவரும் மனுதாக்கல் செய்தனர்