ஷிங்டன்
வியட்நாமில் போர் கைதியாக இருந்தவரும் அமெரிக்க அதிபர் வேட்பாளருமான ஜான் மெக்கெய்ன் மரணம் அடைந்தார்.
அமெரிக்காவின் அரசியல் பிரமுகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஜான் மெக்கெய்ன். இவர் வியட்நாம் போரின் போது 5 வருடம் சிறையில் கைதியாக இருந்தவர். இவர் இரு முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்டவர் ஆவார். தற்போது இவர் செனட் உறுப்பினராக உள்ளவர்.
சமீபத்தில் கண்ணில் கோளாறு ஏற்பட்டதால் ஜான் மெக்கெய்னுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு மூளையில் புற்று நொய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் உடல்நிலை சிறிது சிறிதாக சுகவீனம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை சுமார் 4.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அப்போது அவர் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவருடன் இருந்தனர்.
அவர் மறைவுச் செய்திய அவரது மகளும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான மேகன் மெக்கெய்ன் தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து இரங்கல் செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.