தன்னிடம் உளவுப்பிரிவு துறை காவலர் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக சமூக ஆர்வலர் வளர்மதி அதிர்ச்சி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு சென்ட்ரல் ரயில்நிலையத்தில் வளர்மதி உள்ளிட்ட பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து மக்களிடத்தில் நிதி வசூல் செய்துகொண்டிருக்கும் போது உளவுப்பிரிவு காவலர் ஒருவர் மேற்கொண்டோரை வீடியோ எடுத்ததாகவும், அதனை தடுத்த போது அவர் தன்னை தகாத இடத்தில் தொட்டதாக பகீர் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார் வளர்மதி.
ஆனால், உளவுப்பிரிவு காவலர் தனது பணியை மேற்கொண்டிருந்தபோது அவரை தாக்கிவிட்டு அவர் மேல் இப்படியானதொரு புகாரையும் வளர்மதி தரப்பு தெரிவிப்பதாக அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு வளர்மதி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அருந்தமிழன்,காளிமுத்து, சாஜன்,மணிகண்டன் என 5 பேரை கைது செய்த காவல்துறை வட்டாரம் கிசுகிசுக்கிறது.