அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார் இந்த கொடூர தகப்பன். இவருக்கு 16 மாதமே ஆன கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அக்குழந்தையை, தந்தை சரசரவென கழுத்தை அறுத்துள்ளார்.
பிறகு குழந்தையின் உடலெங்கும் கத்தியால் குத்தி குத்தி கொன்றுள்ளார். குழந்தையின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் என்ன சத்தம் என்று பார்க்க கையில் துப்பாக்கியுடன் ஓடிவந்தார்.
அப்போது குழந்தையை, தகப்பனே துடிக்க துடிக்க கொன்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை மேலும் கத்தியால் குத்தாமல் இருக்க, பக்கத்து வீட்டுக்காரர் தன் துப்பாக்கியால் தந்தையின் காலில் சுட்டார்.
உடனே கத்தியுடன் அவர் கீழே மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் குற்றுயிரும் குலையிருமாக கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர். ஆனால் பலன் இல்லை. குழந்தை தந்தை கத்தியால் குத்தும்போதே இறந்துவிட்டிருக்கிறது.
குழந்தையை தந்தை கொல்வதை பற்றி பக்கத்து வீட்டுக்காரர் சொல்லும்போது, கொலையாளி ‘இயேசு வருகிறார், இயேசு வருகிறார்’ என்று சத்தமாகக் கத்திக் கொண்டே கத்தியால் குத்தியதாக கூறுகிறார்.
காலில் சுட்டதற்காக பொலிசார் பக்கத்து வீட்டுக்காரர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. கடைசியில் அந்த வினோத தகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்தனையோ பேர் நாட்டில் குழந்தை பாக்கியம் இன்றி தவிக்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பலர் தற்கொலையே செய்து கொண்டு வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இப்படி கோரமாகவும், கொடூரமாகவும் கொலை செய்தவர் மனநோயாளியா, அல்லது வேறு ஏதேனும் வெறிபிடித்த மிருகமாக என தெரியவில்லை. ஆனால் குழந்தை இறந்தவிதத்தை நினைத்தாலே அதை ஜீரணிக்கவே முடியவில்லை.