பிறந்து சில காலம் வரை நாம் நம் தாயுடன் வளர்ந்து வருகிறோம். குழந்தைகள் காலம் என்றாலே ஒரு ஜாலியான பருவம் தான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத விடலை பருவத்தில் இருந்திருப்போம். ஆண் குழந்தைகள் என்றால் அதிகம் வெளி நடப்பு விளையாட்டில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். பெண் பிள்ளைகள் தான் வீட்டிலே விளையாட சாமன்கள் டெடி பெர் போன்ற பொம்மைகளை விரும்பி வாங்கி விளையாடுவார்கள்.
இதில் சற்று மோசமான விஷயம் என்னவென்றால் விளையாடும் பொம்மைகளில் கூட குழந்தை பருவம் முதலே ஆண் – பெண் என்ற பாகுபாட்டை நாம் கொண்டு வருகின்றோம். சரி டெடி பெர் ஏன் பெண்கள் விரும்புகிறார்கள்? என்ற சுவாரஸ்யமான விஷயத்திற்கு வருவோம்.
டெடி பெர் உருவானவை
எந்த வகையான பொருளாக இருந்தாலும் அதற்கு பின் ஒரு வித வரலாறு இருக்கத்தான் செய்யும். அதே போன்றுதான் டெடி பெர் பொம்மைக்கும். இதற்கென்றே ஒரு தனித்துவமான வரலாறு உள்ளது. இந்த டெடி பெர் என்பது கரடிகளையே குறிக்கிறது. அமெரிக்காவில் அந்த காலத்தில் வேட்டையாடுவது ஒரு வழக்கமாக இருந்திருந்தது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில்தான் இந்த “டெடி பெர்” என்ற பெயர் உருவானது.
அமெரிக்க பிரசிடண்ட் தியோடோர் ரூஸ்வெல்ட் என்பவர் தன் நண்பர்களுடன் வேட்டை ஆட செல்லும்போது அங்கு இருந்த கரடி ஒன்றை வேட்டை ஆட சொன்னாராம். அப்போது இவர், அதன் மீது பரிவு கொண்டு அதனை வேட்டையாடாமல் விட்டுவிட்டாராம். இந்த நல்ல உள்ளதை பாராட்டி ஒரு பொம்மை விற்கும் தொழிலாளி சிறிய மென்மையான கரடி பொம்மையை தயாரித்து, அவரின் பெயரையே அதற்கு சூட்டி அவருக்கு பரிசளித்தார். அதாவது, இந்த பிரசிடண்டின் புனை பெயர் “டெடி” என்பதாம். அன்று முதல் இந்த டெடி பெர் மிகவும் பிரபலமானது.
டெடி பெர் குழந்தை…!
அதிக படியான குழந்தைகள் இந்த டெடி பெர் பொம்மையை தங்கள் அருகிலேயே வைத்து கொண்டு தூங்குவது ஒரு அற்புதமான ஆரோக்கிய விஷயமே..! பொதுவாக குழந்தைகள் என்றாலே அதிக நேரம் தாயுடன் இருக்க செய்யும். ஆனால், சற்று வளர்ந்து பள்ளிக்கு செல்லும் பருவத்தில் தாய், கூடவே இருக்க முடியாது. அந்த நேரங்களில் குழந்தைகளுக்கு இது துணையாக இருக்குமாம்.
குழந்தைகள் டெடி பெர் பொம்மையை எப்போதும் தங்கள் பிரியமான தாயிற்கு இணையாக கருதுவார்களாம். இவற்றுடன் இருந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பயம், தயக்கம், தனிமை தன்மை போகுமாம். மேலும் இது, தாய் குழந்தையுடன் இல்லை என்ற ஏக்கத்தை போக்கி குழந்தையின் உளவியல் ரீதியான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அத்துடன் உணவை ஒழுங்காக உண்ணாத குழந்தைக்கு டெடி பெர் காட்டி ஊட்டிவிடலாம்.
பெண்கள் விரும்புவது ஏன்?
பெரும்பாலான பெண்கள் டெடி பெர் பொம்மையை கையில் வைத்து கொண்டே தூங்குவார்கள். இதற்கென்றே அறிவியல் ரீதியான நன்மைகள் உள்ளன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. டெடி பெர் கொண்டு தூங்கினால் அது பெண்களுக்கு நிம்மதியாக தெரிகிறதாம். அத்துடன் எந்த வகையான பிரச்சினை இருந்தாலும் டெடி பெர் கொண்டு தூங்கினால் பெண்களின் மனநிலை சீராகி விடுமாம்.
பெண்கள் அனைவரின் காதல்காரன் இந்த டெடி பெர்தான். டெடி பெர் கொண்டு உறங்கும் பெண்கள் நல்ல தூக்கத்தை அடைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இது “இன்சோமனியா” (insomania) போன்ற தூக்கம் சார்ந்த நோய்களில் இருந்து காக்குமாம். எனவே, உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் டெடி பெர் பொம்மையை கட்டி பிடித்து உறங்குங்கள்.
ஆண்களுக்கும் பிடிக்கும் டெடி பெர்
பெண்கள் மட்டும்தான் டெடி பெர் வைத்து கொண்டு தூங்குவதாக ஒரு கட்டுக்கதை இருந்து வருகிறது. உண்மையில் பெண்களை போலவே ஆண்களுக்கும் டெடி பெர் மீது அதீத பிரியம் இருக்கிறது என ஆய்வுகள் சொல்கிறது. இன்றும் பல ஆண்கள் டெடி பெர் கொண்டு உறங்குவது வழக்கமே. இதனால் ஆண்களுக்கு ஏற்படும் தனிமை நிலை குறைகிறதாம்.
நமக்கு மன அழுத்தம் இருந்தால் என்னென்னமோ செய்வோம். ஆனால், இந்த டெடி பெர் பொம்மை ஒன்று இருந்தாலே மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி சாந்தம் கிடைக்குமாம். மிகவும் மென்மையான அழகான டெடி பெர் ஒன்றை வாங்கி கொண்டு, அதனுடன் மன அழுத்தம் இருக்கும் நேரங்களில் விளையாடினால் மன அழுத்தம் குறையும்.
ஒரு விஷயம் அதிக பேருக்கு பிடிக்கிறது என்றால் கட்டாயம் அது அறிவியல் ரீதியாக அணுக ஆராய்ச்சியாளர்கள் முற்படுவார்கள். டெடி பெர் பொம்மையை பற்றிய ஆய்வில், இது மனதுக்கு நல்ல எண்ணங்களை தருவதாக கண்டறிந்தனர். மேலும் பலருக்கு இருக்கும் தனிமை போன்ற மோசமான எண்ணங்களை இது நீக்கி விடுமாம்.