இன்றைய தினத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்களின் வெறுப்பினை பெரிதும் சம்பாதித்த மஹத் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் ‘எலிமினேட்’ செய்யப்பட்டுள்ள மஹத்தின் பெயர் மாறாக ஒரு சிவப்பு நிற அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. இது பிக் பாஸ் வரலாற்றிலேயே நடைபெற்றுள்ள புது விதமான ‘எலிமினேட்’ அறிவிப்பாக கருதப்படுகிறது.
பொதுவாக கால் பந்து போட்டிகளில் அதிமான விதிமீறல்களை செய்யும் போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படுவதை நாம் கண்டிருப்போம். யாஷிகாவிடம் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்கும் வைத்தது, அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரமாக மஹத் நடவடிக்கை மோசமாக இருக்கிறது. அதுமட்டும் இன்றி மும்தாஜிடம் மிகவும் எல்லை மீறிய விளையாட்டுகளும் சேட்டைகளுமே மஹத்தை வெளியேற்றியிருக்கின்றன.
‘ஆட்டத்தைத்தை தப்பாக ஆடி விட்டீர்கள் மஹத்; தப்பான ஆட்டம் ஆடியவர்களுக்கு ரெட் கார்டு தருவதே சரியான தீர்ப்பாக இருக்க முடியும்’ என்றபடி வசமான குறும்படம் ஒன்றையும் போட்டுக் காட்டி, அனுப்பியிருக்கிறார்கள்.