தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இருந்து, யுத்தத்தின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளியொருவர் தனது உயரம் காரணமாக சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்திருந்தார். பல அரசியல் பிரமுகர்களும் அவருடன் புகைப்படம் எடுத்திருந்தனர்.
முன்னர் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனும் அவருடன் புகைப்படம் எடுத்திருந்தார்.
இன்று( 26) முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்றது. இதில் இந்த உயரமான போராளிக்கு பதிவுத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
கடந்த பத்து வருடமாக சட்டபூர்வ திருமணம் செய்யாமல் தனது மனைவியுடன் இவர் வாழ்ந்து வந்த நிலையில், பதிவுத்திருமணம் செய்து வைக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.