நமஸ்தே இங்கிலாந்து’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் இறுக்கமான உடையணிந்து வந்த பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ராவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பாலிவுட்டில் ஃபேவரைட் ஜோடியான அர்ஜுன் கபூர்-பரினீத்தி சோப்ரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘நமஸ்தே இங்கிலாந்து’. இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் அர்ஜுனும், பரினீத்தியும் ஈடுபட்டு வருகின்றனர்.
திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் வித்தியாசமான உடையணிவதில் நடிகைகள் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால், சில சமயம் அது மோசமாக போகும் நிலையில், கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதும் வழக்கமாக மாறி வருகிறது.
சமீபத்தில் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றிற்கு, டைட்டாக உடையணிந்து வந்துள்ளார் பரினீத்தி. தனக்கு துளியும் செட்டாகாத ஆடையால், ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கவும் முடியாமல், உடையை சரி செய்வதிலேயே கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும், அவரது தலைமுடியும் சரியாக செட்டாகததால் புரொமோஷன் நிகழ்ச்சியில் மிகவும் பதட்டாமாகவே பரினீத்தி காட்சியளித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பரினீத்தி சோப்ராவை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.