பிரபல தொகுப்பாளினி விவாகரத்தான ஒரே ஆண்டில் மறுமணத்துக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சின்னத்திரையில் பிரபலமாகும் பெரும்பாலான தொகுப்பாளினிகளுக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. இந்த வரிசையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான பூஜா ராமசந்திரனும் தற்போது தமிழ்-தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் நானி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இவர், தொகுப்பாளினியாக பணியாற்றியபோதே அவருடன் பணிபுரிந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் பரஸ்பரமாக தங்களது உறவை முறித்துக் கொண்டனர்.
விவகாரத்துக்கு பின் திரைப்படங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்த பூஜா, தற்போது மறுமணத்துக்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. பூஜா தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.