Loading...
கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து்ளளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளை சந்திந்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
Loading...
தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்வதாகவும், இதற்கான திட்டமிடல்கள் மற்றும் முன்மொழிவுகளை அதிகாரிகள் ஊடாக அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...