தமிழர்களின பாரம்பரிய உணவுகளில் ஒன்றே பாயாசம். இலகுவாக அதனை எப்படி செய்வதென அறிந்து கொள்வோம்..
தேவையா பொருட்கள்
1 கப் சமைத்த அரிசி
2 தேக்கரண்டி பருப்பு வகைகள்
3/4 வெல்லம் கப்
4 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
10 முந்திரி
10 உலர்ந்த திராட்சை
1 தேக்கரண்டி துறுவிய தேங்காய்
1/2 கப் பால் கொதிக்கவைத்து பின்னர் குளிர் படுத்தப்பட்ட பால்
செய்முறை…
ப்ரெஷர் குக்கரில் பருப்பு வகைகளை சேர்த்து நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இரண்டாவது விசிலில் அதனை இறக்கி விட வேண்டும்.
அடுப்பில் பெரிய பாத்திரம் ஒன்றை வைக்க வேண்டும்.
பாத்திரம் சூடானவுடன், வெல்லம் சேர்க்க வேண்டும்.
அதில் ஒரு கப் நீர் சேர்க்க வேண்டும்.
10 நிமிடங்கள் அதனை கொதிக்க விட வேண்டும்.
வேறு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சோற்றினை போட்டு நன்கு நசுக்கி கொள்ள வேண்டும்.
அதில் வேக வைத்த பருப்பு வகைகளை சேர்த்து கிண்ட வேண்டும்.
பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து கிண்ட வேண்டும்.
அதனை 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
அதனை அடுப்பில் இருந்து இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள சேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் இட்டு முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை பொறிக்க வேண்டும்.
அது பழுப்பு நிறமாக மாறியவுடன் பாயசத்தில் சேர்த்த வேண்டும்.
இறுதியாக பால் சேர்த்து நன்று பதமாக வரும் வரை கிளற வேண்டும். பாயாசமாகியவுடன் இறக்கி பரிமாறலாம்.