பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் மஹத். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது யாஷிகா மஹத்தை காதலிப்பதாக நேரடியாக கூறியிருந்தார். சில நாட்களுக்கு பிறகு யாஷிகா மீது தனக்கும் காதல் வந்ததாக மஹத் கூறியிருந்தார்.
மஹத் தன்னுடைய காதலை சொன்ன வேகத்திலேயே இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது யாஷிகாவுடனான காதலை வெளிப்படுத்தியதால் மஹத்தின் காதலி பிராச்சி தன்னுடைய காதலை முறித்து கொள்வதாக இன்ஸ்டாகிராமில் குமுறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது பிராச்சி இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த பதிவை மட்டும் நீக்கியுள்ளார். இதனால் பிராச்சி மஹத்தின் தவறை மன்னித்து மீண்டும் ஏற்று கொண்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பிக் பாஸில் இருந்து வெளியேறிய மஹத் பிராச்சியை சந்தித்து யாஷிகா மீது வந்தது காதல் அல்ல, ஈர்ப்பு தான் என சமாதானப்படுத்தினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.