நீரிழிவு நோய் என்பது இப்பொழுது வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் தாக்கி வருகிறது.
இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த நீரிழிவு நோயால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றையும் மக்கள் சந்திக்கின்றனர்.
நீரிழிவும் இதய பாதிப்பும்
இந்த விளைவுகள் அவர்களை ஒரு அபாய கட்டத்திற்குள் கொண்டு சென்று விடுகிறது. மேலும் உங்கள் குடும்பத்தில் 55 அல்லது 65 வயது வரை உள்ள எவர்க்கேனும் இதய நோய் பாதிப்பு இருந்தால் பரம்பரை பரம்பரையாக அது தொடரவும் வாய்ப்புள்ளது.
இந்த மாதிரி பரம்பரை சார்ந்து வரும் இதய நோயை உங்களால் தடுக்க முடியாது. ஆனால் இதய நோய்கள் தாக்காமல் இருக்கும் வண்ணம் கட்டுப்பாட்டோடு வாழலாம்.
சென்ட்ரல் வகை உடல் பருமன்
இந்த உடல் பருமன் என்பது இடுப்பு பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் உடல் பருமன் அதிகரிக்கிறது. ஓரு ஆணுக்கு சராசரி இடுப்பளவு 40 அங்குலத்திற்கு அதிகமாகவும் பெண்களுக்கு 35 அங்குலத்திற்கு அதிகமாகவும் இருந்தால் அவர்கள் சென்ட்ரல் உடல் பருமன் கொண்டு இருக்கின்றனர்.
இப்படி அடிவயிற்று பகுதியில் போடப்படும் கொழுப்புச் சத்து நம் உடலில் கெட்ட கொழுப்பு (LDL) தேங்கியுள்ளதுக்கு காரணமாக அமைகிறது. எனவே இந்த கொழுப்புகள் இரத்த குழாய்களில் படிந்து அடைத்து கொள்கின்றன. இதனால் இதய நோய்கள் வரும் அபாயம் ஏற்படுகிறது.
கொழுப்பு சத்து
இந்த LDL கொலஸ்ட்ரால் தமனி போன்ற இரத்த குழாய்களில் படிந்து இரத்த குழாயை சுருக்கி இரத்த ஓட்ட பாதையை அடைத்து விடுகிறது. இதனால் இரத்த தமனிகள் வழியாக இரத்தம் இதயத்திலிருந்து மற்ற பாகங்களுக்கும் இதயத்திற்கும் செல்ல முடியாமல் தடங்கல் ஏற்படுகிறது. எனவே இந்த கெட்ட கொழுப்புகள் அதிகமாகும் போது இதய நோய் களும் அதிகரிக்க ஆரம்பமாகி விடுகின்றன.
இதில் ட்ரைகிளிசரைடு என்ற மற்றொரு கொழுப்பு உள்ளது. இதன் அளவும் அதிகரிக்கும் போது இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நமது உடலில் உள்ள HDL என்ற நல்ல கொலஸ்ட்ரால் அளவும் உள்ளது. இது நமது இரத்த குழாய்களில் படிந்துள்ள நல்ல கொலஸ்ட்ராலை கரைத்து கல்லீரலுக்கு அனுப்பி வெளியேற்றுகிறது. எனவே இந்த நல்ல கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால் இதய நோய்கள் ஏற்படும்.
உயர் இரத்த அழுத்தம்
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும் இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் கஷ்டப்படும். உயர் இரத்த அழுத்தம் இதயத்தை சேதப்படுத்துதல், இரத்த குழாயை பாதித்தல், ஹார்ட் அட்டாக், பக்கவாதம், கண் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை போன்றவற்றை ஏற்படுத்தும்.
புகைபிடித்தல்
புகைப்பிடிப்பது இதய நோய்கள் ஏற்படுவதை இன்னும் மோசமாக்கி விடும். எனவே புகைப்பழக்கத்தை கைவிடுவது நல்லது. அதிலும் குறிப்பாக டயாபெட்டீஸ் நோயாளிகள் இதை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது. புகைப்பிடிப்பதால் கண் பிரச்சினை, கால்களில் உள்ள இரத்த குழாய்களில் பாதிப்பு, ஊனமுற்ற நிலை போன்றவற்றை ஏற்படுத்தி விடும்.