மீன் எண்ணெய் மாத்திரைகள் எடுத்து கொண்டால் பல நோய்கள் தடுக்கப்படும் என நினைப்பவர்களுக்காக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்கமைய,
நீரிழிவு நோய்
இதய நோய்
பக்கவாதம்
போன்ற நோய்கள் ஏற்படுவதனை தடுக்காதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 3 நோய் அறிகுறிகள் ஏதுமில்லாத, 15,000 பேருக்கும் அதிகமானோர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த அனைவரிடமும் கிட்டத்தட்ட ஏழாண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு பின்னர் வெளியாகிய தகவலை பிரித்தானிய சஞசிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
இவ்வாறான இதய நோய் வராமல் தடுப்பதற்கு அல்லது அதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்கு, மீன் எண்ணெய் உதவுவதில்லை என குறிப்பிடத்தக்கது.
தற்போது அதன் ஆய்வு முடிவுகள் தெளிவாகக் காட்டுவதாய், இந்த ஆய்வை நடத்திய முதன்மை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.
மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது.
இதய ஆரோக்கியத்துக்கு அவ்வளவு தூரம் உதவுவதில்லை.
கடந்த சில ஆண்டுகளாக இந்த விடயத்தை நிரூபிக்க பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.