குருணாகல் – வாரியபொல பகுதியில் 29 வயதான நபர் ஒருவர் 46 வயதான ஏற்கனவே திருமணமான பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞன் இரும்புக் கம்பியொன்றினால் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளார்.
பீ.எச். சியாமலி பதிராஜ் என்ற 46 வயதான தாதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த தாதி குருணாகல் போதான வைத்தியசாலையில் பணியாற்றி வந்துள்ளார்.
கணவரை பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்து வாழ்ந்து வந்த பெண் 29 வயதான இளைஞருடன் வாரியபொல பிரதேசத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னதாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த இளைஞர் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம், தற்போது சட்டபூர்வமான கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.