Loading...
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குடும்பத்தினர் தற்போது வீட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதனால் பிக்பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் குடும்பத்தினரை பிரிந்து இருந்து வந்த போட்டியாளர்கள் கண்ணீரில் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்கு நித்யா அனுப்பியுள்ள கடிதத்தில் “நான் உனக்கு தோழியாக மட்டும் எப்போதும் உடன் இருப்பேன்” என குறிப்பிட்டு சொல்லியுள்ளார்..
அதை பார்த்து பிக்பாஸ் வீட்டில் நடிகர் பாலாஜி கண்ணீர் சிந்தியுள்ளார். அதை பார்த்து அவரது மனைவி நித்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Loading...
“அவர் கண்ணீர் சிந்துவதை 9 வருடங்கள் கழித்து இப்போது தான் பார்க்கிறேன். அவரை ஒரு மனிதராக ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் கணவராக ஏற்றுகொள்ளமுடியாது” என நித்யா கூறியுள்ளார்.
Loading...