இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்பாக 5 பிரபல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் பெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை தொடர்பாக ஏனைய இடது சாரி வழக்கறிஞர்கள் மற்றும் அறிஞர்களின் வீடுகளில் காவல்துறையினர் தேடுதல் நடத்தியுள்ளதாகவும் மாவோயிஸ்டுகளோடு தொடர்புடையதான குற்றச்சாட்டின் பேரில் குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி நடைபெற்ற மிக பேரணியில் இந்த செயற்பாட்டளர்கள் தலித்துகளை தூண்டிவிட்டதால் நடைபெற்ற வன்முறையால் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் சோதனைக்கு பின்னர், புனேவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைதுகளுக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் இருந்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.