மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது நண்பனுடன் இணைந்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ள கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Panvel நகரில் வசித்து வந்த ராகேஷ்(29) என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, உன்னுடன் பேச வேண்டும் எனக்கூறி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அங்கு தனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த அவர், குளிர்பானத்தில் மயக்க மருந்தினை கலந்துகொடுத்துள்ளார். அதன்பிறகு, மனைவி பாதி சுயநினைவில் இருந்தபோது தனது நண்பனுடன் இணைந்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவை வைத்து மனைவியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதனை வெளியில் கூறினால், நீ ஒழுக்கங்கெட்டவள், வேறு ஒருவருடன் இருந்துள்ளாய் எனக்கூறி, சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் வேதனையடைந்த மனைவி வீட்டில் துவண்டுபோயுள்ளார். இந்நிலையில் இப்பெண்ணின் சகோதரி அளித்த நம்பிக்கையின் பேரில்,
காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். IPC sections 376 (பாலியல் வன்புணர்வு) சட்டத்தின்படி கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்,