கனடாவில் பக்கவாதத்தால் அவதிப்படும் மகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல தந்தை கஷ்டப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரிக்ஷா ஒன்று வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது.
Labrador நகரை சேர்ந்தவர் பிரேசர் ட்ரோவர். இவர் மகள் கெய்லி ட்ரோவர் (21). கெய்லி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சக்கர நாற்காலியில் தான் வலம் வருவார்.
இதனால் அவரை வெளியிடங்களுக்கு அதிக தூரம் அழைத்து செல்வது பிரேசருக்கு சிரமமாக இருந்தது.
இந்நிலையில் சீனாவில் மாற்றுதிறனாளிகள் உபயோகப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும் ரிக்ஷா குறித்து கேள்விப்பட்ட பிரேசர் அதை ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார்.
இதையடுத்து மகளை ரிக்ஷாவின் பின்புற இருக்கையில் சக்கர நாற்காலியோடு உட்காரவைத்து வைத்து கொண்டு, ரிக்ஷாவை பிரேசர் ஓட்டி செல்கிறார்.
ரிக்ஷா பின்னால் மகளின் பெயரான கெய்லி என எழுதப்பட்டுள்ளது.
ரிக்ஷாவில் சீட் பெல்ட் இருப்பது மேலும் வசதியை கொடுக்கிறது.
மேலும், வயதானவர்களிடம் கட்டணம் வசூலித்து கொண்டு அவர்களை ரிக்ஷாவில் ஏற்றி கொண்டு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார் பிரேசர்.