இலங்கை தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மூளைச்சாவு அடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
45 வயதான இலங்கை தமிழர் கடந்த வாரம் தற்கொலைக்கு முயன்ற நிலையில் South Brisbane நகரில் உள்ள லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் கடந்த ஞாயிறு அன்று மூளைச்சாவு அடைந்தார்.
உயிரிழந்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அகதி வழக்கறிஞர் ஐயன் ரிண்டவுல் கூறுகையில், அந்த நபர் கடந்த 2014-ல் அவுஸ்திரேலியாவுக்குள் வந்தார்.
Nauru-வில் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து தங்கியிருந்தார், அவரின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இலங்கையிலேயே விட்டுள்ளார்.
தஞ்சம் கோருவோரை தடுக்க மேற்கொள்ளப்படும் கடுமையான கொள்கைக்கு இன்னொரு பலிக்கடாவாக இவர் மாறியுள்ளார்.
இவர்களுக்கு நியாயங்கள் மறுக்கப்படுவதோடு, வேண்டுமென்றே தாமதங்களை செய்யப்படுகிறது.
இதோடு சட்ட உதவிகளும் மறுக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.