உணவகம் ஒன்றில் வெயிட்டர்களின் பர்ஸ்கள் இரண்டை லாவகமாக திருடிச் சென்றார் ஒரு நபர்.
அவர்கள் உணவக உரிமையாளரிடம் இது குறித்து புகாரளித்ததும் அவர் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து CCTV பதிவுகளையும் போட்டுப் பார்த்தார்.
அவற்றில் சாப்பிட வந்த ஒரு நபர், ஊழியர்கள் யாரும் கவனிக்காத நேரத்தில் இரண்டு பர்ஸ்களை நைஸாக திருடிச் செல்வதைக் கண்டார்.
உடனே அந்த நபரின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட அவர், அந்த நபரை யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த செய்தி 1400 முறைகளுக்கும் அதிகமாக பகிரப்பட்டது. ஆனால் அதற்குப் பின் நிகழ்ந்தது யாருமே எதிர்பாராத ஒரு சம்பவம்.
திருட்டு நடந்தால் தங்களிடம் புகார் தெரிவிக்க வேண்டுமேயொழிய யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது என்று பொலிசார் உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரைவசி விதிகளை மீறியதாக அவர் மீது ஒருவேளை நடவடிக்கை கூட எடுக்கப்படலாம். தொடர்ந்து பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.